சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் 'பேபி மா' பாடல் வெளியீடு


Baby Ma: A duet from ‘Mazaka’ carries the V.Day mood
x

இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்த இவர், தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மசாக்கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரிநாத் ராவ் நக்கினா இயக்கி உள்ள இப்படம் வருகிற 26-ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான பேச்சிலர் ஆந்தம் வெளியாகி வைரலானநிலையில், தற்போது 2-வது பாடலாக 'பேபி மா' வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story