‘பேபி கேர்ள்’...கவனம் ஈர்க்கும் நிவின் பாலி பட டிரெய்லர்

இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.
‘பேபி கேர்ள்’...கவனம் ஈர்க்கும் நிவின் பாலி பட டிரெய்லர்
Published on

சென்னை,

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது நிவின் பாலி பேபி கேர்ள் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது. சர்வம் மாயாவுக்கு பிறகு இப்படம் வெளியாக உள்ளதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com