ரோஷினியின் ‘பேட் கேர்ள்ஸ்’ பட டிரெய்லர் வெளியீடு

இப்படம் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாக உள்ளது.
சென்னை,
அஞ்சல் கவுடா, பாயல் செங்கப்பா, ரோஷினி, யஷ்னா, மொயின் மற்றும் ரோஹன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பேட் கேர்ள்ஸ். பிரஸ்விதா என்டர்டெயின்மென்ட், நீலி நீலி ஆகாச கிரியேஷன்ஸ், என்விஎல் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் சசிதர் நல்லா, இம்மதி சோம நர்சய்யா, ராமிசெட்டி ராம்பாபு, ரவுலா ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை '30 ரூங்கு பிரமாண்டம் ஏலா' புகழ் இயக்குனர் பாணி பிரதீப் துளிப்புடி இயக்கி இருக்கிறார்.
பேட் கேர்ள்ஸ் படம் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பரிசாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசரை இயக்குனர் புச்சி பாபு சனா வெளியிட்டார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு முன் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் நான்கு பெண்கள் மற்றும் அதன் விளைவாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய அடல்ட் காமெடி படமாக இது உருவாகி இருக்கிறது.






