பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கே.ஜி.எப் பட இயக்குநர் கதையில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹீரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

கேஜிஎப், காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்துள்ள ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பஹீரா படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் டாக்டர் சூரி இயக்குகிறார். கேஜிஎப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீலின் பஹீரா கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் டாக்டர் சூரி. இவர் தில்லியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எலும்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவில் மேற்படிப்பும் முடித்துள்ளார். சினிமா மீதான ஆர்வத்தினால் 2012ல் நடிகர் யஷ்ஷை வைத்து லக்கி எனும் படத்தினை இயக்கியுள்ளார். இவர், பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் உருவான சலார் -1 படத்தில் வசனம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்துள்ளார். பிரசாந்த் நீலின் முதல் படமான உக்ரம் படத்தின் நாயகனும் இவர்தான். கன்னடாவில் கண்டி,உக்ரம் ஆகிய படங்களின் மூலம் மிகவும் கவனம் பெற்ற நடிகராக அறியப்படுகிறார் ஸ்ரீமுரளி.

கே.ஜி.எப் படத்தின் மேக்கிங் சாயலை பஹீரா படத்தின் டீசரில் காண முடிகிறது. ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்தால் அது சிறப்பான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com