பாலையாவின் “அகண்டா 2” படத்தின் ரிலீஸ் அப்டேட்

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலையாவின் “அகண்டா 2” படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று வெளியாக இருந்தது. சில சூழ்நிலைக்காரணமாக பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாலையா நடித்துள்ள அகண்டா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com