பாலாவின் “காந்தி கண்ணாடி” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

ஷெரீப் இயக்கத்தில் பாலா நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் இரண்டு நாட்களில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது.
Published on

சென்னை,

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஷெரீப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி படம் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெர்வின் சாலமன் மற்றும் விவேக் இசையமைத்துள்ளனர். படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி கண்ணாடிதிரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா இடையே உள்ள காதலை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com