நடிகர் ஷேன் நிகம் மீதான தடை நீக்கம்

நடிகர் ஷேன் நிகம் மீதான தடை நீக்கம்
Published on

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஷேன் நிகம். இவர் கிஸ்மத், கும்பலாங்கி நைட்ஸ், இஸ்க், வெயில் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் ஷேன் நிகம் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. வெயில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்த ஹேர்ஸ்டைலை மாற்றிய சர்ச்சையில் சிக்கினார். இன்னொரு படப்பிடிப்பில் மது அருந்தி விட்டு போதையில் வந்ததாக புகார் கிளம்பியது. இதையடுத்து ஷேன் நிகம் சினிமாவில் நடிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கமும், கேரள சினிமா தொழிலாளர் சங்கமும் தடை விதித்தன. இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதுபோல் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு படப்பிடிப்புக்கு வருவதாக புகார் கிளம்பிய நிலையில் அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துடன், மலையாள நடிகர் சங்கம் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஷேன் நிகம் மீதான தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com