'ஜனநாயகன்' படத்தை இணையதளம், கேபிள் டிவிகளில் வெளியிட தடை– ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதி தெரிவித்தார்.
'ஜனநாயகன்' படத்தை இணையதளம், கேபிள் டிவிகளில் வெளியிட தடை– ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கும் பின்னர் திரும்ப பெறப்பட்டது.

இந்தநிலையில், இந்த திரைப்படம் இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து, படத்தை இணையதளங்களில் வெளியிடவும், கேபிள் டிவிக்களில் வெளியிடவும் தடை விதிக்கக் கோரி படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கும் முன்பே படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்’’ என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலும் கேபிள் டிவிகளிலும் வெளியிட அல்லது ஒளிபரப்பு செய்ய இடைக்கால தடை விதிக்கிறேன்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com