ரேணுகாசாமி கொலை வழக்கை மையமாக கொண்ட ‘பாஸ்' படத்தை வெளியிட தடை

நடிகர் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பாஸ் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
ரேணுகாசாமி கொலை வழக்கை மையமாக கொண்ட ‘பாஸ்' படத்தை வெளியிட தடை
Published on

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கை மையமாக வைத்து கன்னடத்தில் 'பாஸ்' என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ரேணுகாசாமி கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தெளிவாக தெரிகிறது. மேலும் நடிகர் தர்ஷனின் உடல் மொழிகள் மற்றும் பாவனை, ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்தது போன்ற அனைத்தும் பாஸ் படத்தின் காட்சிகளுடன் ஒத்திருந்தது.

இந்த படம் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பாஸ் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாஸ் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com