’திரையுலகின் பெயர் அவர்களால்தான் கெடுகிறது’ - நடிகை எஸ்தர்

காஸ்டிங் கவுச் பிரச்சினை குறித்து நடிகை எஸ்தர் கருத்து தெரிவித்துள்ளார்
’திரையுலகின் பெயர் அவர்களால்தான் கெடுகிறது’  - நடிகை எஸ்தர்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு திரைப்படத் துறையில் காஸ்டிங் கவுச் பிரச்சினை குறித்து நடிகை எஸ்தர் நோரோன்ஹா வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதை ஒழிக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

சமீபத்திய பேட்டியில், இன்றைய தலைமுறை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் திறமையை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும், ஆனால், பழைய தலைமுறையைச் சேர்ந்த சில பிரபலங்கள் இன்னும் காஸ்டிங் கவுச்சில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் திரையுலகின் பெயர் கெடுகிறது என்றும் கூறினார்.

Also Read
அல்லு அர்ஜுனை சந்திக்க 42 ரூல்ஸ்?.. அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகர் தரப்பு
’திரையுலகின் பெயர் அவர்களால்தான் கெடுகிறது’  - நடிகை எஸ்தர்

மேலும், அதற்கு ஓகே சொல்பவர்களும் தவறானவர்கள்தான் என்றும், அவர்களையும் கண்டித்து துறையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் எஸ்தர் வலியுறுத்தினார். அனைவரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com