சவுதியில் "மரண மாஸ்" படத்துக்குத் தடை!

நடிகர் பாசில் ஜோசப் நடித்த ‘மரண மாஸ்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது.
சவுதியில் "மரண மாஸ்" படத்துக்குத் தடை!
Published on

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் 'கோதா', 'மின்னள் முரளி' படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் முன்னேறியுள்ளார்.இவர் நடிப்பில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவர் தற்போது 'மரணமாஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஒரு வித்தியாசமான பன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார். இதன் கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். இந்தப் படத்தை டோவினோ தாமஸ், ரபியல் பிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.மரணமாஸ் எனும் பாடலை மனு மஞ்சித் எழுதியுள்ளார். எலக்ட்ரானிக் கிளி என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த 10ம் தேதி வெளியானது.

நகைச்சுவை திரைப்படமாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இப்படத்தில் திருநங்கை ஒருவர் நடித்துள்ளதால் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் திரையிட அந்நாட்டு தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. படத்தை வெளியிட வேண்டுமென்றால் திருநங்கை இடம்பெறும் காட்சியை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com