'பசூக்கா' படத்தின் பிரீ ரிலீஸ் டீசர் வெளியீடு


Bazooka Pre Release Teaser
x
தினத்தந்தி 9 April 2025 11:17 AM IST (Updated: 19 April 2025 9:00 PM IST)
t-max-icont-min-icon

இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' என்ற படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள பசூக்கா படத்தில் மம்முட்டி நடித்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story