ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் - சமந்தா அறிவுரை

ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள் - சமந்தா அறிவுரை
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் அரிய வகை மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சில மாதங்கள் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்துள்ள சாகுந்தலம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு பழனி கோவிலுக்கு சென்று வழிபட்டார். 600 படிகள் ஏறி ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் ஒருவருக்கொருவர் கனிவாக இருக்க வேண்டும். யார் என்ன பிரச்சினையில் போராடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com