இப்படி இரு... தங்கையின் 13-வது பிறந்த நாளில் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை

நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக 2025-ம் ஆண்டில் குபேரா, தம்மா மற்றும் தி கேர்ள் பிரண்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இரு... தங்கையின் 13-வது பிறந்த நாளில் நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை
Published on

பெங்களூரு

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த மாதம் தன்னுடைய 30-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சிம்ரன் என்ற தங்கை இருக்கிறார். சிம்ரனின் 13-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, தங்கையின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில், நீல நிற கேக்கின் முன் சிம்ரன் நிற்பது போன்றும், மற்றொரு புகைப்படத்தில், பிறந்த நாள் ஆடை அணிந்த தங்கையுடன் மந்தனா நிற்பது போன்ற காட்சிகளும் உள்ளன.

அப்போது, இந்த வயதில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? என்று தங்கைக்கு மந்தனா அறிவுரை கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய அறிவுரையில், என்னுடைய இனிமையான சகோதரிக்கு, மகிழ்ச்சியான 13-வது பிறந்த நாள் வாழ்த்துகள். 13-வது வயது கொண்டாட்டத்திற்குரியது.

அதனால், இந்த வயதில் மகிழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் இரு. அதனை உறுதிப்படுத்திக்கொள். இனிமையான சகோதரிக்கு அன்பான வாழ்த்துகள். அன்பால் உன்னை தழுவி கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார். சிம்ரனுக்கு, மந்தனாவின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக 2025-ம் ஆண்டில் குபேரா, தம்மா மற்றும் தி கேர்ள் பிரண்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் காக்டெயில் 2, மைசா மற்றும் ரணபாலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. ராஷ்மிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா செஞ்சேபெள்ளூர் கிராமம் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com