சரிப்பட்டு வராததால் ‘‘நடிகை திரிஷா காதலை முறித்தேன்’’ –நடிகர் ராணா தகவல்

திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. ஏற்கனவே இவருக்கு முடிவான திருமணம் நிச்சயதார்த்ததோடு நின்று விட்டது. அதன்பிறகு பாகுபலியில் வில்லனாக நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் ராணாவுடன் சுற்றினார்.
சரிப்பட்டு வராததால் ‘‘நடிகை திரிஷா காதலை முறித்தேன்’’ –நடிகர் ராணா தகவல்
Published on

நடிகர் ராணா பிரபல தெலுங்கு பட அதிபர் ராமாநாயுடுவின் பேரன். ஒரு தெலுங்கு படத்தில் சேர்ந்து நடித்தபோது நெருக்கமானார்கள்.

பட விழாக்களுக்கு சேர்ந்தே வந்தார்கள். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திரிஷா கருத்து சொல்லாமல் இருந்தார். ராணாவிடம் கேட்டபோது நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்து வந்தார்.

ஆனாலும் இருவரையும் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த நிலையில் நடிகர்கள் பிரபாஸ், ராணா, இயக்குனர்கள் ராஜமவுலி, கரண் ஜோஹர் ஆகியோர் டி.வி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டனர். இதில் திரிஷாவை காதலிக்கிறீர்களா? என்று ராணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ராணா, எனக்கு திரிஷா 10 வருடங்களுக்கு மேலாக தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். கொஞ்ச காலம் அவரை காதலிக்கவும் செய்தேன். பின்னர் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து காதலை முறித்துக் கொண்டேன். என்றார். பிரபாஸ் பேசும்போது, ராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன். எனக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com