ராமாயணம் இல்லை...இந்த படத்தின்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சாய் பல்லவி

இந்தப் படம் வருகிற நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
சாய் பல்லவி, அமீர் கானின் மகன் ஜுனைத் கானுக்கு ஜோடியாக, ''ஏக் தின்'' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை சுனில் பாண்டே இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வருகிற நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அமீர் கான் புரொடக்சன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
மறுபுறம், பாலிவுட்டில் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சன்னி தியோலுடன் இணைந்து நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் சீதா கதாபாத்திரத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இதன் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.
Related Tags :
Next Story






