ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

ரன்பீர் கபூர் ராமராக நடித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு
Published on: 

சென்னை,

நடிகர் ரன்பீர் கபூர் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில், “ராமாயணா” படக்குழுவும் ரன்பீர் கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர்

ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தற்போது , இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், பிரீத் சிங் சூர்ப்பனகையாக நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இந்தப் படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

வரவேற்பை பெற்ற “ராமாயணா” டிரெய்லர்

‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 30ம் தேதி வெளியானது. அதில் பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிடிஎஸ் வீடியோ

இந்த நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் நேற்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில், “ராமாயணா” படக்குழுவும் ரன்பீர் கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் ராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ள காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com