சோனியா அகர்வாலின் திரில்லர் படம் 'பிஹைண்ட்'

‘பிஹைண்ட்’ படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
சோனியா அகர்வாலின் திரில்லர் படம் 'பிஹைண்ட்'
Published on

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். 

ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான். ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார். அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com