கடலில் மூழ்கி பிரபல நடிகர் பலி - சோப்பு விளம்பரத்தில் நடிக்க சென்றபோது விபரீதம்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகர் ராகுல் பானர்ஜி
கடலில் மூழ்கி பிரபல நடிகர் பலி - சோப்பு விளம்பரத்தில் நடிக்க சென்றபோது விபரீதம்
Published on

புவனேஷ்வர்,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகர் ராகுல் அருனொடெ பானர்ஜி (வயது 43). இவர் வங்காளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். ராகுல் நடிகையான பிரியங்கா சங்கரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், சோப்பு விளம்பரத்தில் நடிப்பதற்காக ராகுல் பானர்ஜி இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள தல்சாரி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். மேற்கு வங்காளத்தின் மதினிபூர் மாவட்டத்திற்கு அருகே இந்த கடற்கரை உள்ளது.

ராகுல் பானர்ஜி சக நடிகரான டிகாண்டா பட்ஜியுடன் சோப்பு விளம்பரத்தில் நடித்தார். பின்னர் மதியம் ராகுல் பானர்ஜி விளம்பர படப்பிடிப்பு குழுவினருடன் கடலில் குளிக்க சென்றுள்ளார்.

கடலில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ராகுல் பானர்ஜி அலையில் இழுத்து செல்லப்பட்டார். அவரை மீட்க குழுவினர் முயற்சித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் ராகுல் பானர்ஜியை மயங்கிய நிலையில் படப்பிடிப்புக்குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துமனனையில் அனுமதித்தனர். ஆனால், ராகுல் பானர்ஜி பரிசோதித்த டாக்டர்கள் கடலில் மூழ்கி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சோப்பு விளம்பர படப்பிடிப்புக்கு சென்றபோது நடிகர் ராகுல் பானர்ஜி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com