இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைந்த 'பென்ஸ்' படம்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'எல்.சி.யூ' வில் இணைந்த 'பென்ஸ்' படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 'புல்லட் மற்றும் கால பைரவா' போன்ற படங்களில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக 'பென்ஸ்' படம் உருவாகிறது. இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் எல்.சி.யூ எனப்படும் "லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்" சாயலில் இடம் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 

அதாவது, நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'பென்ஸ்' படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் 'எல்.சி.யூ' வில் இப்படம் இணைந்துள்ளதாக கூடுதல் தகவலையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com