சம்யுக்தா பிறந்தநாளையொட்டி "பென்ஸ்" படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்


சம்யுக்தா பிறந்தநாளையொட்டி பென்ஸ் படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
x

நடிகை சம்யுக்தா நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா மேனன் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக வாத்தி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'பென்ஸ்' படத்தில் இணைந்துள்ளார். 'பென்ஸ்' படம் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகை சம்யுக்தா நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பென்ஸ் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story