'பென்ஸ்' - புதிதாக இணைந்த நடிகர் யார்? - கிளிம்ப்ஸ் வெளியீடு

இன்று மாலை 5 மணிக்கு அந்த நடிகரையும் அவரது கதாபாத்திரத்தையும் படக்குழு அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இதற்கிடையில், இப்படத்தில் புதிதாக இணைந்திருக்கும் நடிகரையும் அவரது கதாபாத்திரத்தையும் இன்று மாலை 5 மணிக்கு படக்குழு அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது அதுகுறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
அது மலையாள நடிகர் நிவின் பாலியாக இருக்கும் என ரசிகர் கமெண்ட் செய்து வருகின்றனர். தோல்விப்படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






