

சென்னை,
67 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன. இன்று அந்த விருதுகள் டெல்லியில் வைத்து வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விருது வாங்கிய பின்னர் நடிகர் தனுஷ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விருதின் புகைப்படத்தை பகிர்ந்து, 'என்னுடைய ரசிகர்களுக்கு' என பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.