மகளுக்கு நிச்சயதார்த்தம்; நடிகை ராதா நெகிழ்ச்சி

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
மகளுக்கு நிச்சயதார்த்தம்; நடிகை ராதா நெகிழ்ச்சி
Published on

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவரது மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். வா டீல், அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தனது தந்தையின் ஓட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

வருங்கால கணவருக்கு கார்த்திகா மோதிரம் மாற்றும் நிச்சயதார்த்த புகைப்படத்தை நடிகை ராதா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ராதா வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், "புதிய குடும்பத்துக்கு விரைவில் எங்கள் பெண்ணை கொடுப்பதற்காக நான் பெருமைப்படாமல் இருக்க முடியாது.

வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வது ஆகும். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த தாயும் விரும்பக்கூடிய சிறந்த மகள் கார்த்திகா.

என் இதயத்தில் கலவையான உணர்வுகள் உள்ளன. இந்த சிறந்த அனுபவத்துக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com