'காபி குடிக்க கூப்பிடும் ஆண்களிடம் ஜாக்கிரதை' - பூனம் பாஜ்வா

ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்
'காபி குடிக்க கூப்பிடும் ஆண்களிடம் ஜாக்கிரதை' - பூனம் பாஜ்வா
Published on

'சேவல்', 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஒரு கட்டத்தில் இவரது உடல் எடை கூடிப்போக படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. ஆனாலும் 'ஆம்பள', 'அரண்மனை-2', 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார்.

தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "பொதுவாகவே காபி குடிக்க போலாமா? என்று ஆண்கள் வெகுளித்தனமாக கேட்பார்கள். ஆனால் அதில் இருக்கும் உண்மை எனக்கு தெரியும். ஆனால் இதை அழகாக ஆண்கள் சொல்வார்கள். காபிக்காக அவர்கள் அழைப்பதில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது. நிறைய பொருள்கள் அதில் புதைந்துள்ளன. எனவே ஜாக்கிரதை'' என்று பூனம் பாஜ்வா பேசியிருக்கிறார்.

'ஏங்க... காபி குடிக்க கூப்பிடுவது ஒரு குற்றமாங்க...' என்று ரசிகர்கள் தமாஷாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். சிலர் 'நீங்க எத்தனை காபி குடிச்சிருப்பீங்க?' என்று வில்லங்கமாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com