நடிகர் சங்க தேர்தல்: நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
நடிகர் சங்க தேர்தல்: நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி
Published on

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார்.

துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இந்த அணியை சேர்ந்த இன்னொரு துணைத்தலைவரான பொன்வண்ணன் போட்டியிடவில்லை.

அவருக்கு பதிலாக பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், நிதின் சத்யா, சரவணன், வாசுதேவன், காந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் பேட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பெதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களம் காண்கிறார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா ஆகியேர் பேட்டியிடுகிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் களம் காண்பதால் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com