'பாரத் என்ற பெயர் அர்த்தம் நிறைந்தது, இந்தியாவின் அர்த்தம் என்ன?' - கங்கனா ரனாவத்

பழைய ஆங்கிலத்தில் ‘இந்தியன்’ என்றால் ‘அடிமை’ என்று அர்த்தம் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
'பாரத் என்ற பெயர் அர்த்தம் நிறைந்தது, இந்தியாவின் அர்த்தம் என்ன?' - கங்கனா ரனாவத்
Published on

சென்னை,

ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் 'இந்தியா' என்ற பெயர் 'பாரத்' என்று மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் குறித்து முன்னரே கூறியதாகவும், பாரத் என்ற பெயர் அர்த்தம் நிறைந்தது என்றும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

"மகாபாரத காலத்தில் இருந்தே, குருக்ஷேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் என்ற ஒரு கண்டத்தின் கீழ் வந்தன. பாரதம் என்ற பெயர் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இந்தியா என்றால் என்ன?

செவ்விந்தியர்களை அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்னவென்றால், பழைய ஆங்கிலத்தில் 'இந்தியன்' என்றால் 'அடிமை' என்று அர்த்தம். அதே போல் ஆங்கிலேயர்கள் நமக்கும் இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அதுவே அவர்கள் நமக்கு கொடுத்த புதிய அடையாளம்.

பழங்கால அகராதியிலும் கூட இந்தியன் என்பதன் அர்த்தம் அடிமை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை சமீபத்தில் மாற்றிவிட்டார்கள். மேலும் இது எங்கள் பெயர் அல்ல, நாங்கள் பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல."

இவ்வாறு கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

Kangana Ranaut (@KanganaTeam) September 5, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com