பாரத்- சான்வி மேக்னா கூட்டணியில் புதுப்படத்தின் பூஜை

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் பாரத்- சான்வி மேக்னா கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்கிறது.
பாரத்- சான்வி மேக்னா கூட்டணியில் புதுப்படத்தின் பூஜை
Published on

சென்னை,

மாவீரன், 3பிஎச்கே, மற்றும் சியான் 63 போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், அதன் நான்காவது படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கிறார், அவருடன் குடும்பஸ்தன் பட நடிகை சான்வே மேகனாவும் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் எதிர்பார்ப்பு மிகுந்த புதிய திரைப்படங்களுள் ஒன்றாக, பாரத் சான்வி மேக்னா நடிக்கும் புதிய படம் தயாரிப்பில் உள்ளது. கடந்த ஆண்டு நம்பவர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம், இன்னும் பெயரிடப்படாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதேசமயம் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்குநராக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பு எண் 4 என்ற தலைப்பில் படத்தை தயாரிக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்களிலும், படத்தின் பூஜை நிகழ்வும், படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பால சரவணனும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.

வரவிருக்கும் இந்த படம் நடிகர் பாரத்தின் இரண்டாவது படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் மூலம் பாரத் நடிகராக அறிமுகமாகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com