

பாரதிராஜாவின் கடைசி படமான ‘புலவர்’ அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்துள்ளார்.
பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாரதிராஜா, கடந்த ஜூன் 10-ந் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, அவரை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. அவரது படைப்புகளும், கதாபாத்திரங்களும் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், அவர் கடைசியாக நடித்த திரைப்படம் தற்போது திரைக்கு வர தயாராகி உள்ளது.
முருகையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘புலவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரதிராஜா நடித்த கடைசி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘புலவர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் வெளியிட்டார்.
இப்படம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி முதல் ‘புலவர்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘புலவர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில் பாரதிராஜாவின் திரை தோற்றத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.