47 வயதிலும் குறையாத அழகு... தனது டயட் ரகசியத்தை உடைத்த நடிகை பூமிகா

தமிழில் விஜய்யுடன் ’பத்ரி’ திரைப்படத்தில் பூமிகா நடித்திருந்தார்.
47 வயதிலும் குறையாத அழகு... தனது டயட் ரகசியத்தை உடைத்த நடிகை பூமிகா
Published on

ஐதராபாத்,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பூமிகா சாவ்லா. 2000-ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், அதன் பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழில் விஜய்யுடன் நடித்த ’பத்ரி’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவுடன் 'சில்லுனு ஒரு காதல்' மற்றும் 'ரோஜா கூட்டம்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த பூமிகா, பின்னர் கேரக்டர் ரோல்களுக்கு மாறி தனது நடிப்பு திறனை மேலும் நிரூபித்தார். குறிப்பாக எம்.எஸ். தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் அக்காவாக நடித்தது பாராட்டுகளை பெற்றது.

Also Read
சமூக ஆர்வலர் கொலை : கொந்தளித்த நடிகை பார்வதி
47 வயதிலும் குறையாத அழகு... தனது டயட் ரகசியத்தை உடைத்த நடிகை பூமிகா

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பூமிகா, 47 வயதிலும் தனது இளமை மற்றும் அழகை பராமரிப்பதன் ரகசியங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், "நான் எதை சாப்பிட்டாலும் அதை மிதமான அளவில் (Moderation) சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். வீட்டில் சமைத்த சைவ உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று அவர் கூறியுள்ளார்.

குறைவான காரம் கொண்ட உணவுகள், அதிகப்படியான தண்ணீர் மற்றும் பழங்களை உட்கொள்வது தனது சருமத்திற்கு மினுமினுப்பைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதற்காக நான் தினமும் யோகா செய்கிறேன். உடல் தகுதியை பராமரிக்க நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியை ஒருபோதும் தவறவிடுவதில்லை" என்றார்.

சரியான தூக்கம் இல்லையென்றால் எரிச்சல் ஏற்படும் என்றும், பயணங்கள் மேற்கொள்வதும் புத்தகங்கள் வாசிப்பதும் தனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய பூமிகாவுக்கு, 'MCA' (மிடில் கிளாஸ் அபாயி) படத்தில் நடித்த 'வதினம்மா' கதாபாத்திரம் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'யூபோரியா' படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com