''பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை'' - அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
சென்னை,
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றுவரும் சந்திய திரைப்பட விழாவில் அபிஷேக் பச்சன் 'ஐ வாண்ட் டு டாக்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
இதனைத்தொடர்ந்து, நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனைப் பாராட்டி ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அமிதாப் பச்சன், "பூமியில் மிகவும் மகிழ்ச்சியான தந்தை. ஒரு தந்தைக்கு இதை விட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. அபிஷேக், நீங்கள் நம் குடும்பத்தின் பெருமை மற்றும் மரியாதை'' என்று தெரிவித்திருக்கிறார்.
அபிஷேக் கடைசியாக 'காளிதர் லாபட்டா' படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்தப் படம் ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது, மேலும் ''தெய்விக் பகேலா''விலும் நடித்து வருகிறார்.
மறுபுறம், அமிதாப் தற்போது 'கவுன் பனேகா குரோர்பதி' சீசன்17 ஐ தொகுத்து வழங்குகிறார். இவர் கடைசியாக 'வேட்டையன்' படத்தில் நடித்தார்






