தொடங்கியது பிக் பாஸ் 9 : போட்டியாளர்களின் விவரம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் சீசன் 9 இன்று தொடங்கியுள்ளது.
சென்னை,
தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 9-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது.
போட்டியின் தொடக்க நாளான இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள்.
திவாகர் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், சமூக வலைதளங்களில் பிரபலமானவர். இவர் பிசியோதெரபி மருத்துவர்.
அரோரா சின்க்ளேர் - மாடலிங் துறையைச் சேர்ந்த இவர், புதுச்சேரியை சேர்ந்தவர். மாடலிங் துறையைத் தேர்வு செய்து, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
எப்.ஜே - ராப் பாடகரான இவர் ஒரு பீட் பாக்ஸ் கலைஞர். விவசாயிகள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக தனது பாடல்களை எழுதி பாடுவது இவரது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது.
பார்வதி - யூடியுப் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான இவர், தற்போது சின்ன திரை பிரபலமாகவும் இருந்து வருகிறார்.
துசார் - இவரின் பெற்றோர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். நடிகனாக வேண்டும் என்ற கனவில், சினிமா துறைக்கான வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார்.
கனி - குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளராகத் தேர்வானவர். இயக்குநர் அகத்தியனின் மகள். சில படங்களில் நடித்துள்ளார்.
சபரி - விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன், பொன்னி தொடரில் நடித்தவர்.
பிரவீன் காந்தி- ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களின் இயக்குநரான பிரவீன் காந்தி, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளால் விமர்சிக்கப்பட்டு வருபவர்.
கெமி - கூடைப்பந்தாட்ட வீராங்கனை. இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். குக் வித் கோமாளி சீசனில் பங்கேற்றுள்ளார்.
ஆதிரை- திருப்பூரைச் சேர்ந்த இவர் விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சீரியல் தொடரில் நடித்துள்ளார். தற்போது மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரம்யா ஜோ - ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடனக் கலைஞரான இவர், மைசூரைச் சேர்ந்தவர். பெற்றோர்கள் பிரிந்ததால் ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஆடல், பாடல் நடன நிகழ்ச்சியில் இணைந்த இவர் சினிமா மீது கவனம் செலுத்தி வருகிறார்.
கானா - சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா இசை கலைஞர்
வியானா - மாடலிங் துறையிலுள்ள இவர் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பிரவீன்- சீரியல் தொடர்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் அதற்கு தயாராகி வருகிறார்.
சுபிக்ஷாபிக் - தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், மீனவ சமுதாய பிரச்னைகளை வெளி உலகிற்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் யூடியூபரானார்.
அப்சரா- கன்னியாகுமரியைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா, தாய்லாந்தில் இந்தியா சார்பாக மிஸ் இன்டர்நேஷ்னல் குயின் பட்டம் வென்றவர். மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாடலிங் துறையிலும் தற்போது அசத்தி வருகிறார்.
நந்தினி- கோவையைச் சேர்ந்த இவர், உடற்பயிற்சியையும் யோகாவையும் வாழ்வில் மிக முக்கியமாகக் கருதுபவர். நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்.
விக்கல்ஸ் விக்ரம் - விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பல காமெடி வீடியோக்களைப் பதிவிட்டு வருபவர்.
கம்ருதின்- சென்னையைச் சேர்ந்த இவர் சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் அதற்கு தயாராகி வருகிறார்.
கலையரசன்- தேனியைச் சேர்ந்த இவர், இளம் வயதிலேயே குடும்ப வாழ்வின் கடினமான சூழலால் காசிக்குச் சென்று அகோரியானார். திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதால், மீண்டும் தேனிக்கு திரும்பி குடும்ப வாழ்வை ஏற்று வாழ்ந்து வருகிறார்.






