பிக் பாஸ் நடிகைக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை ஜூலி தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
பிக் பாஸ் நடிகைக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்
Published on

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் நர்ஸ் ஜூலி. அந்த புகழ், அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் நிகழ்ச்சி வரை கொண்டு போய் சேர்த்தது. ஒரு நர்ஸ்சாக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் சினிமா படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு நடித்தார். அதன்பின்னர், ஜூலி மாடலிங்கில் படு பிசியாகிவிட்டார். ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு படு வேகமாக சமூகவலைத்தளத்தில் பிரபலமானார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் என்னை வலிமையான இடத்தில் வைத்து நேசித்தீர்கள். வேட்புமனு(நிச்சயதார்த்தம்) தாக்கல் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்க தயாராக இருக்கிறேன். அவரை பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டும் ஆனால் இப்போதைக்கு, அவர் தான் எனக்கு ஏற்ற சரியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

சமூக ஊடகங்களில் நடிகை ஜூலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜூலி காதலித்து வந்த அவரது காதலருடன் தான் இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், அவர் யார் என்ற விவரங்களை வெளியிடவில்லை. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com