மனைவியை பிரிந்த “பிக்பாஸ்” பிரதீப் ஆண்டனி

பூஜா சக்தியைப் பிரிவதாக பிரதீப் ஆண்டனி அறிவித்த நிலையில், திருமண வாழ்க்கை மற்றும் மகன் குறித்து அவர் பகிர்ந்த உருக்கமான பதிவு கவனம் பெற்றுள்ளது.
மனைவியை பிரிந்த  “பிக்பாஸ்” பிரதீப் ஆண்டனி
Published on

குழந்​தை, அதன் அம்​மாவுடன் இருப்​பதே நல்​லது என்று நினைத்​தேன். நான் எப்​போதும் அனாதை​யாக வாழ​வேண்​டும் என்​கிற எனது சாபத்தை ஏற்​றுக்​கொண்​டு​விட்​டேன்​ என ​ பிரதீப் ஆண்டனி கூறி​யுள்​ளார்​.

‘பிக்​பாஸ் சீசன் 7’ மூலம் பிரபல​மானவர் நடிகர் பிரதீப் ஆண்​டனி. இவர்​ ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இவர்​களுக்கு ஆண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில் தனது மனை​வி, மகனைப் பிரிந்​து​விட்​ட​தாக அவர் சமூக வலை​தளத்​தில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர், “நான் தவறான நபரைத் திரு​மணம் செய்​து​விட்​டேன் என்று நினைக்​கிறேன். திரு​மண​மான​தில் இருந்து மோச​மான மனித​னாக மாறிக்​கொண்​டிருந்​தேன். ஒவ்​வொரு நாளும் நான் ஒரு​வருடைய வாழ்க்​கையை அழித்​துக்​கொண்​டிருக்​கிறேன் என்ற உணர்வு இருந்​தது. இன்​னொரு​வருடன் இணைந்து எப்​படி மகிழ்ச்​சி​யாக வாழ்​வது என்று எனக்கு உண்​மை​யிலேயே தெரிய​வில்​லை.

இப்​போது என் திருமண வாழ்க்​கை​யில் இருந்து வில​கிச் செல்ல முடிவு செய்​திருக்​கிறேன். இந்த உறவில் என்​னால் மூச்​சுக்​கூட விட முடிய​வில்​லை. குழந்​தை, அதன் அம்​மாவுடன் இருப்​பதே நல்​லது என்று நினைத்​தேன். நான் எப்​போதும் அனாதை​யாக வாழ​வேண்​டும் என்​கிற எனது சாபத்தை ஏற்​றுக்​கொண்​டு​விட்​டேன்​” எனக்​ கூறி​யுள்​ளார்​.

இதனிடையே, பிரதீப் ஆண்டனியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவர் பின்னர் அதனை நீக்கினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், தனிப்பட்ட விஷயத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தனது தவறு என்றும், அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடாகவே அந்தப் பதிவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

‘அருவி’, ‘வாழ்’, ‘தாதா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள பிரதீப் ஆண்டனி, ‘பிக்பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com