‘பிக்பாஸ்’ பாவனிக்கு கொரோனா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாவனிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
‘பிக்பாஸ்’ பாவனிக்கு கொரோனா
Published on

தமிழில், வஜ்ரம், 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பாவனி ரெட்டி. தெலுங்கு படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் பிக்பாஸ் 5-வது சீசனிலும் பங்கேற்றார். இதில் அவருக்கு 3-வது இடம் கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாவனிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாவனி ரெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத் சென்றுவிட்டேன். ரசிகர்கள் ஆதரவை பார்த்து வியந்தேன். எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது டாக்டர்கள் அறிவுரையோடு வீட்டில் தனிமையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் விரைவில் குணமடையும்படி பாவனி ரெட்டியை வாழ்த்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com