விஜய்சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரில் “பிக்பாஸ்” விஜே பார்வதி

விஜய்சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடர் வரும் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
விஜய்சேதுபதியின் “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரில் “பிக்பாஸ்” விஜே பார்வதி
Published on

இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள "முத்து என்கிற காட்டான்" இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மணிகண்டன் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மாபெரும் படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார்.

விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். இத்தொடரில்

மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சமீபத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் டீசர், டிரெய்லர் வெளியானது.

இந்த நிலையில், முத்து என்கிற காட்டான் என்ற இணையத் தொடரில் பிக் பாஸ் பிரபலம் விஜே பார்வதி நடிக்கும் பாத்திரத்தின் போஸ்டரை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் லலிதா என்ற பாத்திரத்தில் விஜே பார்வதி நடிக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவதுடன், விஜே பார்வதியின் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடர் வரும் மார்ச் 27 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com