'பிகில்'நடிகையின் புதிய படம்


Bigil actress new film
x

2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

மேலும், தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர். பின்னர், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு கன்னடத்திலும் நடித்து அறிமுகமானார். தெலுங்கில் தற்போது கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மேட் ஸ்கொயர்' படத்தில் சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு ரெபா நடனமாடி இருக்கிறார். இப்படம் வருகிற மார்ச் மாதம் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இவரின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஹுசைன் ஷா கிரண் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'மிருத்யுஞ்சய்' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story