போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'தி கேர்ள் பிரண்ட்' படக்குழு

'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
image courtecy:twitter@MassMovieMakers
image courtecy:twitter@MassMovieMakers
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல கதாநாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் இன்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், 'தி கேர்ள் பிரண்ட்' என்ற பெயரில் தயாராகும் புதிய படம் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகிறது.

படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, ''தி கேர்ள் பிரண்ட் படத்தில் ராஷ்மிகா மந்தனா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார். இந்த படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் அழகான சினிமா அனுபவமாக இருக்கும். தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக சொல்லும் கதையாகவும் இருக்கும். இவ்வாறு கூறினர்.

நேற்று, தி கேர்ள் பிரண்ட் படக்குழு ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை மன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிடப்படும் என்று போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது. அதன்படி தி கேர்ள் பிரண்ட் படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில், எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வாழ்த்துகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ராஷ்மிகா மந்தனா.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com