பிளாக் பேந்தர் 2-ம் பாகம்

சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் பிளாக் பேந்தர்.
பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
Published on

2018-ல் இந்த படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் புகழ் பெற்ற நடிகராக மாறினார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்றும் இதற்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி படத்தின் நாயகன் போஸ்மேன் கடந்த ஆகஸ்டு மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார். இதையடுத்து பிளாக் பேந்தர் 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் பிளாக் பேந்தர் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஜூலை மாதம் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com