"பிளாக்மெயில்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"பிளாக்மெயில்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதனை தொடர்ந்து 'பிளாக்மெயில்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள 'பிளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில், வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மறுவெளியீட்டுத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com