ஜி.வி.பிரகாஷின் "பிளாக்மெயில்" டிரெய்லர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நிறைய ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் வெளியான ஜி. வி. பிரகாஷின் 25வது படமான 'கிங்ஸ்டன்' கலவையான விமர்சனத்தை பெற்றது.

'பிளாக்மெயில்' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 'பிளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 'பிளாக்மெயில்' திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com