பாலிவுட் நடிகை மதுபாலாவின் பயோபிக் படம்: நாயகி யார்?

இந்த பயோபிக் படத்தை இயக்குனர் ஜஸ்​மீத் கேரீன் இயக்க உள்ளார்.
பாலிவுட் நடிகை மதுபாலாவின் பயோபிக் படம்: நாயகி யார்?
Published on

மும்பை,

1950-களில் ​பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் மதுபாலா. குழந்தை நட்சத்திரமாக நடிக்​கத் தொடங்கிய இவர், ‘நீல் கமல்’, ‘அமர்’, ‘சல்தி கா நாம் காடி’ உள்ளிட்ட 70க்கும் அதிகமான படங்​களில் நடித்​திருந்தார். தனது 36-வது வயதில் அவர் மரணமடைந்தது திரையுலகிற்கு பெரிய இழப்பாக அமைந்தது.

இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பட்ஜெட காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சஞ்​சய் லீலா பன்​சாலி தயாரிக்க உள்ள இந்த படத்தை ஜஸ்​மீத் கேரீன் இயக்க உள்ளார்.

இந்த பயோபிக் படத்தில் நடிகை மதுபாலாவின் கதாபாத்திரத்தில் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டராங்களில் தகவல் பரவி வந்தன. இதனால் ரசிகர்களிடையே பெரும் விவாதமும் ஆர்வமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு யார் நடிக்​கிறார் என்ற விவரத்தை வெளி​யிட​வில்​லை. மதுபாலா வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com