முதல் படத்திலேயே ஆலியாவுடன் மோதும் ஸ்ரீலீலா...? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ஸ்ரீலீலா அறிமுகமாகிறார்.
Bollywood PR pits Sreeleela against Alia Bhatt
Published on

சென்னை,

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில், தற்போது டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திரில்லர் படமான ஆல்பாவும், அதே தேதியில்தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஆலியா பட்டுடன் இணைந்து ஷர்வரி வாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தி ரெயில்வே மென்' என்ற தொடர் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஷிவ் ரவைல் இப்படத்தை இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.

ஸ்ரீலீலா தனது முதல் பாலிவுட் படத்திலேயே முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியாபட்டுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com