நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்


நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மெயிலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story