நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னை,

தமிழ் திரைத்துறையின் உச்சநட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த். அதேபோல், தமிழ் திரைத்துறையில் பிரபல நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இருவரும் வீடுகளும் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜின்காந்த், தனுஷ் ஆகியோரின் விடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com