கூடுதலான திரைகளில் திரையிடப்படும் 'பாட்டல் ராதா'


கூடுதலான திரைகளில் திரையிடப்படும் பாட்டல் ராதா
x
தினத்தந்தி 25 Jan 2025 2:49 PM IST (Updated: 25 Jan 2025 2:58 PM IST)
t-max-icont-min-icon

பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பாட்டல் ராதா' படம் கூடுதலான திரைகளில் திரையிடப்பட உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இருக்கிறது. இந்த படத்தை மாரி செல்வராஜ், வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலர் பாராட்டி உள்ளனர்.

முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ் நாடு முழுவதும் கூடுதலான திரைகளில் திரையிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story