மோனிகா பாடலுக்கு நடனம்.... பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்த சிறுவன்

மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டேவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சிறுவன் ஒருவன் ஆடி உள்ளார்.
மோனிகா பாடலுக்கு நடனம்.... பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்த சிறுவன்
Published on

சென்னை,

நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டேவில் ’மோனிகா’ பாடலுக்கு சிறுவன் ஒருவன் வெறித்தனமாக நடனம் ஆடிய வீடியோ இணையத்த வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் கூலி. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் நடனம் ஆடினர்.

Also Read
’2025 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது’ - பூஜா ஹெக்டே
மோனிகா பாடலுக்கு நடனம்.... பூஜா ஹெக்டேவை ஓவர்டேக் செய்த சிறுவன்

இந்நிலையில், மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டேவையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சிறுவன் ஒருவன் ஆடி உள்ளார். அந்த சிறுவன்ன் எனர்ஜியை பார்த்து பூஜா ஹெக்டே வாயடைத்துப் போனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் அந்த சிறுவனை பாராட்டி வருகிறார்கள்.

நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள பெரிய படம் என்றால் அது விஜய்யின்’ஜன நாயகன்’ தான். இந்த படத்தின் சென்சார் பிரச்சினை இன்னும் தீராமல் உள்ளதால், படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி மொத்த திரையுலகத்திற்குமே உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com