ஆபாச வீடியோ இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது

கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக சர்ச்சைக்குரிய இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே வடக்கு கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோ இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது
Published on

பனாஜ்:

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனை பலர் கண்டித்தும் பொருட்படுத்துவது இல்லை.

சமீபத்தில் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாகி இணைந்தனர்.

இந்த நிலையில் பூனம் பாண்டே கோவாவில் உள்ள நீர்தேக்கம் அருகில் நின்று ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவா முன்னேற்ற கழக மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பூனம் பாண்டே கைதாகலாம் என பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவா கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக சர்ச்சைக்குரிய மாடல்-நடிகை பூனம் பாண்டேவடக்கு கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com