கலைந்து போன கனவு - மனம் திறந்த நடிகை தேஜு அஸ்வினி

தனது கலைந்து போன ஒரு கனவு குறித்து நடிகை தேஜு அஸ்வினிமனம் திறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், தேஜு அஸ்வினி. நடன கலைஞரும் கூட. கடைசியாக ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த பிளாக்மெயில் படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. சமூக வலைதளங்களிலும் மிகவும் 'ஆக்டிவ்' ஆக இருக்கும் தேஜூ அஸ்வினி, தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது கலைந்து போன ஒரு கனவு குறித்து தேஜு அஸ்வினி மனம் திறந்தார். அவர் கூறும்போது, "தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு நடனப்பள்ளியை தொடங்கி நடத்தினேன். அதை பிரமாண்டமாக கொண்டு செல்ல நினைத்த நேரத்தில், கொரோனா கால ஊரடங்கு அமலானது. நடன பள்ளியை மூடவேண்டியதாகி விட்டது.

நடனப் பள்ளி என்பது என் கனவு. அது கலைந்து போனதில் பெரும் வருத்தம் எனக்கு. அதனைத்தொடர்ந்து அப்படி இப்படி என சினிமாவுக்கு வந்துவிட்டேன். நடிகையாகவும் மாறிவிட்டேன்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com