டைகர் ஷெராப் மீது கொடூர தாக்குதல்; பதறியபடி ஓடிய முன்னாள் காதலி... துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி என்ன?

துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அறிந்ததும், டைகர் ஷெராப்பை பார்க்க திஷா நேரில் சென்றுள்ளார்.
நடிகர் டைகர் ஷெராப்
Published on: 

மும்பை

நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடந்ததற்கான பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனான 36 வயதுடைய இவர், 'பாகி', 'பாகி-2'. 'வார்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

துப்பாக்கி சூடு

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜுகு பகுதியில் புஷ்பா பார்க் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு சென்ற அவர், விளையாடி விட்டு நேற்றிரவு 7.30 மணியளவில் கருப்பு நிற பி.எம்.டபிள்யூ. காரில் வீட்டுக்கு புறப்பட்டார். நடிகரை காண அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்திருந்தனர்.

கார் மெதுவாக நகர்ந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென்று முன்னே வந்து, கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

வைரலான வீடியோ

இதில், நடிகர் டைகர் ஷெராப்புக்கு கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. கார் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இதன்பின்னர் காரில் இருந்தபடியே, டிரைவர் இருக்கைக்கு சென்ற டைகர் ஷெராப், அவரே காரை ஓட்டி சென்றார்.

இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ரசிகர்களுடன் கூட்டத்தில் மறைந்திருந்த சிலர் திடீரென காரை நெருங்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் உள்ளன. மொத்தம் 7 முறை சுடப்பட்டு உள்ளன. இதில், ஒருவருடைய துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறவில்லை என தெரிகிறது. இதனால், அவர்கள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்.

3 பேர் கைது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், சந்தேகத்தின் பேரில் 3 பேரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் காதலி

வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் டைகர் ஷெராப்பை பார்ப்பதற்காக பலரும் அவருடைய வீட்டுக்கு சென்றனர். நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு தொடர்பான செய்தி வெளியானதும், முன்னாள் காதலியான திஷா பதானியும் அவரை பார்க்க சென்றுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும், அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஆனால், அழுத முகத்துடன் சோகத்துடனும், பதற்றத்துடனும் காணப்பட்ட அவர், யாரிடமும் எதுவும் பேசாமல் விறுவிறுவென்று சென்று விட்டார்.

டேட்டிங்

2018-ம் ஆண்டு பாகி 2 படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். பின்னர் 2 பேரும் வெளியிடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்தனர். விடுமுறையை ஒன்றாக கழித்தனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என திஷா விருப்பம் தெரிவித்தபோது, ஷெராப் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

பல ஆண்டுகளாக, இருவர் பற்றிய டேட்டிங் வதந்தி ஒருபுறம் இருந்தபோதும், 2022-ம் ஆண்டு ஜூலையில் அவர்கள் பிரிந்து விட்டனர். எனினும், அவருடைய சகோதரியுடன் திஷா நட்பை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அறிந்ததும், டைகர் ஷெராப்பை பார்க்க திஷா நேரில் சென்றுள்ளார்.

பிஷ்னோய் கும்பல்

இந்த தாக்குதலுக்கான பின்னணி பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அனில் மற்றும் ஹர்மன் சந்து என்ற 2 பேர் தங்களை அடையாளப்படுத்தி கொண்டு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுவோரை மிரட்டும் வகையில் வீடியோவில் தகவல்கள் உள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கான உள்நோக்கம் பற்றி தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com